மூழ்கும் மலையாள தேசம்… இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்யுங்க… உருகி வேண்டும் கேரள மக்கள் !!

கேரளாவில்கடந்த சிலநாட்களாகஓய்ந்துஇருந்ததென்மேற்குபருவமழை, தற்போது மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குவிடாமல்கனமழைகொட்டிவருகிறது.

இதனால்பலமாவட்டங்கள்வெள்ளக்காடாககாட்சிஅளிக்கின்றன. தாழ்வானஇடங்களில்வெள்ளநீர்புகுந்துஉள்ளது. ஏராளமானவீடுகள்வெள்ளத்தில்மிதக்கின்றன. பலஇடங்களில்நிலச்சரிவுஏற்பட்டுஉள்ளது.

கடந்தஇருநாட்களில்பெய்தபலத்தமழை, வெள்ளம்காரணமாகமாநிலம்முழுவதும்பலியானவர்களின்எண்ணிக்கை 36 ஆகஉயர்ந்துஉள்ளது. பலஇடங்களில்சாலைகள்துண்டிக்கப்பட்டுபோக்குவரத்துபாதிக்கப்பட்டுஇருக்கிறது.

மாநிலத்தில்உள்ள 24 அணைகள்நிரம்பிமுழுகொள்ளளவைஎட்டின. இதையடுத்துபாதுகாப்புகருதிஅணைகளில்இருந்துதண்ணீர்திறக்கப்பட்டுஉள்ளது. மழை, வெள்ளத்தால்பாதிக்கப்பட்டவர்கள்தங்குவதற்காகமாநிலம்முழுவதும் 439 நிவாரணமுகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன வெள்ளத்தில்சிக்கியவர்களைமீட்கும்பணியில்ராணுவத்தினர்ஈடுபட்டுஉள்ளனர்.

இந்த தொடர்மழையல் மூணார் பகுதி மதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறைஅடுத்தபள்ளிவாசல்என்றமலைப்பகுதியில்உள்ள தனியார்தங்கும்விடுதிநிலச்சரிவில் சிக்கி கொண்டது. அங்குதங்கிஇருந்தவெளிநாட்டுசுற்றுலாபயணிகள்உள்பட 61 பேர்வெளியேவரமுடியாமல்சிக்கித்தவித்தனர். இதுகுறித்துதகவல்அறிந்ததீயணைப்புபடையினர்அங்குவிரைந்துசென்றுஅவர்களைபாதுகாப்பாகமீட்டனர்.

மழையால்பெரிதும்பாதிக்கப்பட்டகோழிக்கோடு, வயநாடுபகுதிகளில்போக்குவரத்துதுண்டிக்கப்பட்டஇடங்களில்இருந்துவெளியேவரமுடியாமல்தவித்தமக்களைசிறியஅளவில்தற்காலிகபாலங்களைகட்டிராணுவவீரர்கள்பாதுகாப்பாகமீட்டுமுகாம்களில்தங்கவைத்தனர்.

கேரளாவில்நிலவும்அசாதாரணசூழ்நிலைகாரணமாகஅந்தமாநிலமுதலமைச்சர் பினராயிவிஜயன்நாளைவரைஅனைத்துபொதுநிகழ்ச்சிகளையும்ரத்துசெய்தார்.

முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னதாலா மற்றும் அமைச்சர்கள் உள்ளிடோர் ஹெலிகாப்டரில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபகுதிகளைபார்வையிட்டனர்அவர்பார்வையிட்டார். மேலும் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடுஆகியமாவட்டங்களில்மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வாகனங்களில் சென்று பார்வையிட்டனர்.

பல இடங்களில் கடந்த செல்ல முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து மழை மற்றும் மண் சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும் வீடு நிலங்களை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் உடனடி நிவாரணமாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

பொதுவாக மலையாள மக்கள் மழையைக் கொண்டாடித் தீர்ப்பார்கள். கடந்த மாதம் பெய்த மழையில் கூட இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நனைந்தபடி மழையை அனுபவித்தனர்.

ஆனால் தற்போது கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லா அளவுக்கு மழை பெய்து வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இயற்கை பேரிடரில் இருந்து கேரளாவைக் காக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் என அம்மாநில மக்கள் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் #savekerala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.

நாமும் கேரளாவுக்காக விரார்த்தனை செய்வோம். மேலும் முதலமைச்சர்நிவாரணநிதிக்குநம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் நீங்கள்அனுப்பிவைக்கும், ஒவ்வொருரூபாயும், ஏதாவது ஒரு வகையில், நமது கேரள சகோதரர்களை பாதுகாக்க உதவும். இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

*Chief Minister's Relief Fund..*

Account No:67319948232

State Bank of India, City Branch, Trivandrum

IFSC: SBIN 0070028..

என்ற வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.