முதலமைச்சர்  உட்பட அமைச்சர்களின் சொத்து விவரங்களை, இணையதளத்தில் வெளியிடுவதென, முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முடிவுசெய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறுதிட்டங்களைச் செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கேரளாதிகழ்ந்து வருகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதில் துவங்கி, மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு மாற்றாக இயந்திரம் கண்டுபிடிப்பு; ஜவுளி, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்கள் உட்கார்ந்து பணியாற்றுவதற்கு உரிமை என பல்வேறு மேம்பட்ட நடவடிக்கைகளைக் கேரள அரசுமேற்கொண்டு வருகிறது.

இந்திய அளவில் சிறந்தஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலை பொதுவிவகாரங்களுக்கான மையம் அண்மையில் வெளியிட்டது. அதிலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கேரள மாநிலமே முதலிடத்தை பிடித்திருந்தது.

இந்த முன்மாதிரி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் சொத்து விபரத்தைப் பொதுவெளியில் வெளியிடவும் தற்போது கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற கேரள அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனையை முதலமைச்சர்  பினராயிவிஜயன் முன் வைத்த நிலையில், அதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, 2018-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதிவரையிலான முதலமைச்சர்  உட் பட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் விரைவில் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.இதற்கு முன்பு, அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளுநரிடம் சமர்ப் பித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.