Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் வெள்ளம்; அதிமுக MLA,MP-க்களின் ஒருமாத ஊதியம் வழங்கப்படும்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

கேரளாவுக்கு அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெரிய மழை பெய்துள்ளது. 

Kerala Flood; AIADMK MLA, MP pay a monthly salary Chief Minister Palanisamy announced
Author
Kovai, First Published Aug 19, 2018, 5:34 PM IST

கேரளாவுக்கு அதிமுக எம்.பி.க்கள்  மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெரிய மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 Kerala Flood; AIADMK MLA, MP pay a monthly salary Chief Minister Palanisamy announced

முன்னதாக பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வெள்ள பகுதிகளை பார்வையிட்டனர். பிறகு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் கேரளாவுக்கு அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவித்துள்ளார். கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். காவிரியில் திறக்கப்பட்ட நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்று தமிழக முதல்வர் கூறினார்.Kerala Flood; AIADMK MLA, MP pay a monthly salary Chief Minister Palanisamy announced

பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உதவித்தொகை வழங்கப்படும் என பேட்டியளித்துள்ளார்.Kerala Flood; AIADMK MLA, MP pay a monthly salary Chief Minister Palanisamy announced

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மேலும் மழை நீர் வீணாவதை தடுக்க, தடுப்பணை கட்டுவது குறித்து குழு அறிக்கை அளித்ததும் முடிவு செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios