Asianet News TamilAsianet News Tamil

நாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்கு கொண்ட அரசியல் புள்ளிகள்.. முதல் 5 பேர் பட்டியலில் கேசிஆர்.. 2வது இடம் திமுக .

நாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் ஐந்து பேர் கொண்டோர் பட்டியலில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் கேசிஆர் இடம் பெற்றுள்ளார். தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. 

KCR is among the top 5 politicians with the most criminal cases in the country.
Author
Telangana, First Published Jul 14, 2022, 1:26 PM IST

நாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் ஐந்து பேர் கொண்டோர் பட்டியலில் தெலுங்கானா மாநில முதலமைச்சர் கேசிஆர் இடம் பெற்றுள்ளார். தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. அவர் மீது இதுவரை 64 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் குற்றப் பின்னணி மற்றும் கிரிமினல் வாழ்க்கை கொண்ட அரசியல் புள்ளிகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

KCR is among the top 5 politicians with the most criminal cases in the country.

இதையும் படியுங்கள்: சர்ச்சை ஆடியோ.. கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்.. திடீரென இபிஎஸ்- பொன்னையன் சந்திப்பு

குடியரசு தலைவர் தேர்தல் இம்மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் புள்ளிகளில் குற்றப் பின்னணியை அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ள மக்கள் பிரதிநிதிகளில் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், அவர்களின் குற்றப்பின்னணிகளை இந்த அமைப்புகள் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. அதில் அதிக கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் முதல் ஐந்து நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பெயர் இடம்பெற்றுள்ளது, அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல் ஐந்து எம்பிக்களில் கேரள மாநில எம்பி டீன் குரியகோஸ் 204 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் திமுக எம்எல்ஏ எஸ்.கதிரவன் மீது 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ முகமது ஹசன் கான் 87 வழக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார், மற்றொரு தமிழக எம்எல்ஏ பிரின்ஸ் எழுபத்திமூன்று வழக்குகளுடன் நான்காவது இடத்திலும், தெலுங்கானா முதல்வர் கேசிஆர் 64 குற்ற வழக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளார்.

இதையும் படியுங்கள்: இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது..! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தேர்தலில் மொத்தம் 4 ,809 பேர் எம்.பி ,எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களின் பிரமான பத்திரங்களில் 4759 பேரை மேற்கண்ட அமைப்புகள் ஆய்வு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 4759 எம்பி எம்எல்ஏக்களில் 477  அதாவது 10 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். 

5 வது இடத்தில் உள்ள கேசிஆர் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரம் பின்வருமாறு:-  

தெலுங்கானா மாநில முதல்வர் கேபிஆர் மீது கிரிமினல் மற்றும் மிரட்டல் தொடர்பாக 13 குற்றச்சாட்டுகள் (ஐபிசி பிரிவு 506)  நிலுவையில் உள்ளது, அரசு ஊழியரை தடுத்தல் மற்றும் காயப்படுத்த முயன்றது தொடர்பாக நான்கு வழக்குகள், (ஐபிசி பிரிவு  332) மேலும் கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

KCR is among the top 5 politicians with the most criminal cases in the country.

மேலும் சாதி, மதம் பிறந்த இடம் மொழி போன்றவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, நாட்டு மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதில் பெரும்பாலான வாய்ப்புகள் தெலுங்கானா போராட்டத்தின்போது அவர் மீது பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios