சர்ச்சை ஆடியோ.. கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்.. திடீரென இபிஎஸ்- பொன்னையன் சந்திப்பு

அதிமுக நிர்வாகிகள் தொடர்பாக பொன்னையன் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று வெளியான நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொன்னையன் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

EPS Ponnaiyan meeting after release of audio related to AIADMK ex ministers

பொன்னையன் சர்ச்சை ஆடியோ

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களாக சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோர் திமுகவிற்கு எதிரான கருத்துகளை கூறுவதில்லையென்றும், கே.பி.முனுசாமி திமுகவின் உதவியோடு குவாரி டெண்டர் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாதம் 2 கோடி ரூபாய் கே.பி.முனுசாமிக்கு கிடைப்பதால் திமுக தொடர்பாக எந்தவித கருத்தும் கூறுவதில்லையென குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது சொத்தை காப்பாற்றுவதில் மட்டுமே உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்ஸின் தர்மயுத்த தளபதிகள்.. இபிஎஸ்ஸின் மூவ் என்ன.?

பொன்னையன், SP வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு.. பொது.செ ஆனவுடன் EPS அதிரடி .

EPS Ponnaiyan meeting after release of audio related to AIADMK ex ministers

இபிஎஸ்சை சந்தித்த பொன்னையன்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,  எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணியும் தனது சமுதாய சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு எடப்பாடியை மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான சூழல் உருவானது. இந்த ஆடியோ பதிவை வைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி சாதி ரீதியாக செயல்படுவதாகவும், ஆட்சியின் போது அமைச்சர்கள் முறைகேடு செய்யவும் ஒத்துழைத்தாக குற்றம்சாட்டியிருந்தனர்.  இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொன்னையன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்க்கு வந்தார். அப்போது அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பற்றி  ஆடியோவிற்கு பொன்னையன் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இந்த பிரச்சனை தேவையில்லாதது என்றும் இனி இது போன்று யாரிடமும் பேச கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது..! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios