தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் அமமுக தென்மண்டலச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா யூனியன் சேர்மனான தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 6 ஒன்றியங்களை அதிமுகவும், 5 ஒன்றியங்களை திமுகவும் ஒரு ஒன்றியத்தை அமமுகவும் கைப்பற்றியுள்ளன. இதில், கயத்தாறு யூனியனில் தான் அமைச்சர் கடம்பூர் ராஜுன் கிராமம் வருகிறது. எனவே யூனியன் சேர்மன் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் கடம்பூர் ராஜ் 13-வது வார்டில் மகேஸ்வரி என்ற வேட்பாளரை யூனியன் கவுன்சிலர் பதவி மற்றும் சேர்மன் பொறுப்பிற்காகவும் களமிறக்கி அவரே தீவிர பிரச்சாரமும் செய்தார். 

அதேசமயம் இந்த யூனியனின் கடம்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் கடம்பூர் ஜமீன் பரம்பரையான அ.ம.மு.க.வின் தென் மண்டல பொறுப்பாளரான மாணிக்கராஜா. ஆதிமுதல் தற்போது வரை கயத்தாறு யூனியன் அவர் வசமிருக்கும். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ராஜா, தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியதோடு போட்டியிலிருந்த மூன்று தி.மு.க. வேட்பாளர் உட்பட தானும் 15-வது வார்டில் போட்டியிட்டார். யூனியன் முழுக்க எதிரணி வேட்பாளர்கள் அனைவரின் தேர்தல் செலவையும் ராஜாவே ஏற்றார். 

இந்நிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கியுள்ள வார்டிலும் அமமுகவே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகளில் அமமுக வெற்றி பெற்று கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜா யூனியன் சேர்மனான தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தூத்துக்குடி திமுக எம்.பி.யாக உள்ள கனிமொழி, எம்.எல்.ஏ.அனிதா ராதாகிருஷண்னன், எம்.எல்.ஏ.கீதா ஜூவன் இவர்கள் இருந்து 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 5 திமுகவும், 12 அதிமுகவும் கைப்பற்றியுள்ளது.