வேலூரில் திமுக வேர்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த், ‘இந்த வெற்றி தலைவருக்கு கிடைத்த வெற்றி. கருணாநிதிக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி’’ எனத் தெரிவித்தார். ஆனால் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி சொல்லவில்லை. 

கதிர் ஆனந்த் வெற்றிபெற்றது அவரது தந்தை துரைமுருகனை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் பெற்றுக் கொள்ளும்போது, தனது மகன் கதிர் ஆனந்த்தை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார் துரைமுருகன். 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவினர் நாடாளுமன்றத்துக்கு செல்லும்போது துரைமுருகன் வயிற்றெரிச்சலில் இருந்தார். இப்போது மகன் வெற்றி பெற்றுள்ளதால் ஆனந்தக் கண்ணீர் வடித்து வருகிறார்.