Asianet News TamilAsianet News Tamil

சொன்னபடி செய்வோம்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்-துணைநிலை ஆளுநர் அறிவிப்பு ......

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்தார்.

kashmir election will be soon
Author
Kashmir, First Published Nov 15, 2019, 9:14 AM IST

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமாகின. 

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவையுடன் உடையது. ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை கிடையாது.
ஜம்மு அண்டு காஷ்மீரின் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்மு உள்ளார். ஜம்முவிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரியாசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை விழாவில் துணைநிலை கவர்னர் முர்மு கலந்து கொண்டார். 

kashmir election will be soon

அந்த விழாவில் துணைநிலை கவர்னர் முர்மு பேசுகையில், காவல்துறையை பாராட்டி பேசினார். மேலும், ஜம்மு அண்டு காஷ்மீரில் தற்போதைய நிலை ரொம்ப நாள் நீடிக்காது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் காவல்துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.


ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்து இருப்பது, அங்குள்ள மக்கள் முற்றிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

kashmir election will be soon

சொன்னபடி செய்வோம்: 

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்-துணைநிலை ஆளுநர் அறிவிப்புஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்தார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. 

மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமாகின. ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவையுடன் உடையது. 

kashmir election will be soon

ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை கிடையாது.ஜம்மு அண்டு காஷ்மீரின் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா முர்மு உள்ளார். ஜம்முவிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரியாசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை விழாவில் துணைநிலை கவர்னர் முர்மு கலந்து கொண்டார். அந்த விழாவில் துணைநிலை கவர்னர் முர்மு பேசுகையில், காவல்துறையை பாராட்டி பேசினார். 

மேலும், ஜம்மு அண்டு காஷ்மீரில் தற்போதைய நிலை ரொம்ப நாள் நீடிக்காது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் காவல்துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

kashmir election will be soon
ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்து இருப்பது, அங்குள்ள மக்கள் முற்றிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios