110 எம்எல்ஏக்கள் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டிலும் 10 எம்எல்ஏக்கள் பூந்தண்டலத்திலுள்ள Retrend ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏக்கள் கொண்டு செல்லப்பட்ட முதல் நாள் இரவு பலத்த பாதுகாப்புடன் யாரும் அருகில் வராத படி பார்த்துக்கொள்ள பட்டதால் ஆரம்ப ஜோரில் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது அன்றைய தினம்.
அன்று அதிகமாக டான்ஸ் ஆடியும் மிம்க்ரி செய்தும் கலக்கியவர்களில் முக்கியமானவர் நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ்தான்.

சின்னம்மா புகழ் பாடி குட்டி கரணம் அடித்த இவர் தற்போது "ஏண்டா இந்த கும்பல்ல வந்து சிக்கினோம்" என்கிற ரேஞ்சில் செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.
5 நாட்களாக ஷேவிங் செய்யாத முகத்துடன் காணப்படும் கருணாஸ் 2வது நாள் வழக்கம் போல் காணப்பட்டாராம். 3 வது நாள் அனைவருக்கும் வந்த வெறுமை அவரையும் தொற்றி கொண்டதோடு முக்கியமான குழு ஆலோசனைகளில் இவரை வலுக்கட்டயமாக விலக்கி வைத்தார்களாம்.
தனக்கு மான பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என கருணாஸ் மனம் நொந்து கொண்டதோடு 5 நாட்களாக ஒரே இடத்தில அடைபட்டு தம்மால் இருக்கமுடியாது என குமுறுகிறாராம்.

ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை இங்கேதான் தங்கி இருக்க வேண்டும் என அல்லக்கைகள் சிலர் கடுமையான வார்த்தைகளால் சொல்வதால் மிகுந்த எரிச்சலில் இருக்கிறாராம் கருணாஸ்.
அதை பற்றி சசிகலா தரப்பும் பெரிதாக கவலைபடுவதாக தெரியவில்லையாம்.
விட்டால் போதும் ஓடி விடலாம் என்ற நிலையில் சில எம்எல்ஏக்கல் உள்ளதாக கூறப்பட்டது அந்த லிஸ்டில் தற்போது கருணாசும் இணைந்துள்ளாராம்.

3வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றுள்ள சசிகலா இன்று அங்கேயே இரவு தங்குகிறார்.
கருணாஸ் மனக்குறையை அறிந்து அவறை சரிகட்டுவரா? அல்லது கோட்டை விட்டுவிடுவார்களா? இதற்கான பதில் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்
