அமைதிப் பூங்காவான தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் அவர்களது சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற கருணாஸ் MLA, சில நாட்களுக்கு முன்பு அனைத்து சாதியினரையும்   கண்ணா பின்னா வென  பேசியிருந்தார்.  இது ஒருபுறமிருக்க போலிஸ் உயர் அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை, இப்படி கருணாஸ்  வாய்க்கு வந்தபடி  பேசியிருப்பது  பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஞாயிறன்று கருணாஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் பேசிய கருணாஸ், அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் நடு ராத்திரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழி எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும் என்று கூறினார். அதனால் தான் யார் என்ன செய்தாலும் தமிழகத்தில் வழக்கு பதியப்படுவதாக கருணாஸ் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசினேன் என்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக கருணாஸ் குற்றஞ்சாட்டினார். இதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அவர் புகார் தெரிவித்தார். போலீசார் தப்பு செய்தால் அந்த துறையை வைத்திருக்கும் எடப்பாடியை தான் விமர்சிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியே நான் அவரைஅடிப்பேன் என்று பயப்படுவார் என்று கருணாஸ் அப்போது பேசினார். அதாவது தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்கு தான் சென்ற போது போலீசார் அதிக அளவில் இருந்தனர் என்று அவர் தெரிவித்தார். விசாரித்த போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதாக தன்னிடம் போலீசார் கூறியதாகவும், சரி நமது தேவர் குருபூஜைக்கு வருகிறார் அவரை வரவேற்பது முறை என்று தான் காத்திருந்ததாக கருணாஸ் தெரிவித்தார்.

ஆனால் என்னை முதலமைச்சர் அருகில் கூட விடாமல் போலீசார் தடுத்ததாக கரணாஸ் கூறினார். காரணம் கேட்ட போது, தான் முதலமைச்சரை அடித்தாலும் அடித்துவிடுவேன் என்று அருகில் விடவில்லை என போலீசார் கூறினர். நான் கூறுவது உண்மை, நான் அடித்துவிடுவேன் என்று தான் முதலமைச்சர் என்னை அவர் பக்கத்தில் விடவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்று பேச்சை முடித்தார் கருணாஸ்.