ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் கதிராமங்கலத்திற்கு இன்று சென்றனர். அப்போது ஓ.என்.ஜி.சி. குழாய் கசிவு தொடர்பாக பொதுமக்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறாவிட்டால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா  செய்யத் தயார் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறினார்.

மேலும் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால், தமிழகத்தில் நீட் மற்றும் மீத்தேன் போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது என்றார்.

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பு ஏற்படு குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைப்பதாகவும் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு கூறியுள்ளனர்.