தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த தேர்தல் முடிவுகள் வெளிவரும் பட்சத்தில் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்பது தெரிய வரும்.  ஆனால் தேர்தலுக்குப் பின் மத்திய உளவுத் துறை அளித்த ரிப்போர்ட்டில் இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் அதிமுக அரசுக்கு சாதகமாக இல்லை என்ற தகவல் எடப்பாடியை பீதிக்குள்ளாக்கியது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், இரத்தினசபாபதி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்தரை செய்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் அதிமுக தலைமை, அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்று திமுக ஆதரவாக பேசிய கருணாஸ், திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்த தமிமுன் அன்சாரி, மற்றும் தனியரசு ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைக்க மேலும் உறுப்பினர்கள் தேவைப்பட்டால், கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரை சமாதானப்படுத்தவும் அதிமுக தலைமை தயாராகி வருகிறது. தேவைப்பட்டால் அவர்களுக்கு அமைச்சர் பதவியையும் தர  எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதால் தமிழக அரசியலில் இனி என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியிவில்லை என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.