தமிழகத்தில் சிறைகள் எங்கள் சமுதாயத்துக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது என்றும், அரெஸ்ட்டுக்கு அஞ்ச மாட்டேன் என்றும் பேசிய கருணாஸ் எம்எல்ஏ, துப்பாக்கி முனைக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் சீவலப்பேரி பாண்டி பரம்பரையில் வந்தவன் நான் என அவரை கைது செய்தபோது செய்தியாளர்களிடம் வீர வசனம் பேசினார்.

சென்னைவள்ளுவர்கோட்டத்தில்நடந்தகூட்டம்ஒன்றில்பேசியதிருவாடனைதொகுதிசட்டமன்றஉறுப்பினர்கருணாஸ், ``சாமி, சிங்கம்போன்றபடங்களைபார்த்துவிட்டுஅதேபோல்சிலகாவல்துறைஅதிகாரிகள்நடந்துகொள்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்களுக்குஉயர்அதிகாரிகள்அட்வைஸ்கொடுக்கவேண்டும். நான்சட்டமன்றத்திலேயேபேசியவன். உங்களுக்குபோதைஏற்றினால்தான்கொலைசெய்யதுணிச்சல்வரும். ஆனால்நாங்கள்தூங்கிஎழுந்துபல்துலக்கும்நேரத்தில்கொலைசெய்துவிடுவோம்என்றுபேசினார்.

மேலும்தமிழகமுதலமைச்சரை மேடையில்விமர்சித்தஅவர்குறிப்பிட்டசமுதாயம்குறித்தும்சிலவிஷயங்களைபேசியிருந்தார். அவரதுஇந்தபேச்சுகாவல்துறைவட்டாரத்தில்கொந்தளிப்பைஏற்படுத்தியது. இந்நிலையில்தமிழககாவல்துறைகருணாஸ்மீது 8 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருணாசை போலீசார் அழைத்துச் செல்லும்போது செய்தியாளக்கு பேட்டி அளித்த அவர், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அப்படி ஒரு அனுமதியைப் பெற்றார்களா என தெரியவில்லை என கூறினார்.

நான் எனது சமுதாய உரிமை குறித்து தான் பேசினேன். அதற்காக 307 சட்டப் பிரிவில் என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டு பேச்சுரிமையைப் பறிக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சிறைச்சாலைகள் எங்கள் சமுதாய மக்களுக்காத்தான் கட்டப்பட்டுள்ளது என்றும், சிறைக்கு செல்வதற்கொல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல என்றும் கருணாஸ் குறிப்பிட்டார். துப்பாக்கி முனைக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் சீவலப்பேரி பாண்டி பரம்பரையில் வந்தவன் நான் என்றும் , இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.

தற்போது கருணாஸ் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.