திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட பின்னடைவை அடுத்து இரவில் இருந்து ஹேஷ்டேக்கில் தேசிய அளவில் #karunanidhi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளார்.

திமுகதலைவர்கருணாநிதிவயதுமூப்பு, சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள்காரணமாககடந்த 10 நாட்களாகசென்னை காவேரிமருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் திடீரென அவரது உடல் நிலை மிகுந்த மோசமடைந்தது.

ஆனால் டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் கடந்த சிலநாட்களாகமுன்னேறிவந்தஅவரதுஉடல்நிலையில்நேற்று மாலை மீண்டும் சற்றுபின்னடைவுஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாகமருத்துவமனைவெளியிட்ட அறிக்கையில் திமுகதலைவர் கருணாநிதியின்உடல்நிலையில்பின்னடைவுஏற்பட்டுள்ளது என்றும், அவரதுவயோதிகம்காரணமாகமுக்கியஉடலுறுப்புகளின்இயக்கத்தைபராமரிப்பதில்சவால்நீடித்துவருவதால் அவருக்குதொடர்ந்துமருத்துவகண்காணிப்புமற்றும்தீவிரசிகிச்சைவழங்கப்பட்டுவருகிறதுஎன குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் மருத்துவசிகிச்சைக்குஅடுத்த 24 மணிநேரத்தில்அவரதுஉடல்அளிக்கும்ஒத்துழைப்பைபொருத்துஅவரதுஉடல்நிலையைதீர்மானிக்கமுடியும் என்ற பகீர் அறிவிப்பையும் மருத்துவமளை வெளியிட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் கூடியுள்ளனர். அவர்கள் எழுந்து வா தலைவா.. என கோஷமிட்டபடி நல்ல செய்தி கிடைக்க வேண்டும் விடிய, விடிய காத்துக் கிடக்கின்றனர்.

இதனிடையே நேற்று இரவில்இருந்துடுவிட்டர்ஹேஷ்டேக்கில்இந்தியாஅளவில்கருணாநிதி #karunanidhi என்றஹேஷ்டேக்முதலிடமும், காவேரிமருத்துவமனை #KauveryHospital 2வதுஇடமும்பிடித்துள்ளது.