தி.மு.க. தொண்டன் ஒவ்வொருவனும் கோயிலாக நினைத்துக் கொண்டிருப்பது கருணாநிதியின் கோபாலபுரம் வீடு. இந்த தேசத்தின் முக்கிய தலைவர்கள் எவருக்கும் அந்த வீடு பரிச்சயமானதே! தமிழகத்தின் மட்டுமல்ல நாட்டின் அரசியல் தலையெழுத்தை பல முறை மாற்றியெழுதிய பெருமை அந்த வீட்டுக்கு உண்டு. 

அரசியல் முக்கியத்துவத்துவம் மட்டுமில்லை, சென்டிமெண்ட் இந்த இல்லத்தை மையமாக வைத்து பல சென்டிமெண்டுகளும் உண்டு. தனக்கும், தன் மனைவிக்கும் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்!  ஆ.ராசா மற்றும் வைரமுத்து இருவரும் இதை செயல்பட வேண்டிய கடமையை கொண்டுள்ளனர். 

கோபாலபுரம் வீட்டினுள் வரவேற்பரையில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் தொடர்பான பல முக்கிய புகைப்படங்கள் உள்ளன. அந்த கறுப்பு வெள்ளை படங்களுக்கு நடுவில் ‘ஸ்டாலின் - அழகிரி’ இருவரும் அருகருமே அமர்ந்து, விழா ஒன்றில் ஆனந்தமாய் சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஆயிரம் அர்த்தங்களையும், ஆதங்கங்களையும் கொண்டதாக இருக்கிறது அந்த போட்டோ. 
சரி அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கருணாநிதியின் ஆகப்பெரிய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமான இந்த கோபாலபுரம் இல்லம் பற்றிய ஒரு  முக்கிய தகவல். இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதாவது....1955-ம் ஆண்டு நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கினார் கருணாநிதி. 1968ல் இந்த வீட்டை அழகிரி, ஸ்டாலின், மற்றும் தமிழரசு பெயர்களுக்குப் பதிவு செய்தாராம். 

இந்த வீட்டை கருணாநிதிக்கு விற்றவர் சரபேஸ்வர ஐயர். ஆக ஒரு ஐயரின் வீட்டை வாங்கியமர்ந்துதான் பார்ப்பனியத்துக்கு எதிராக கடும் போராட்டத்தை காலமெல்லாம் நடத்தியிருக்கிறார் கருணாநிதி! என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, தன் அரசியல் மையத்தின் இருப்பிடமாக கருணாநிதி காட்டிக் கொண்டது ஒரு ஐய்யரின் வீட்டைத்தானே! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இதையெல்லாம் விடவும், கோபாலபுரம் வீட்டை மையப்படுத்தி ஒரு ஹாட் ஹைலைட் விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் கடன் பட்டுக் கிடந்ததாம். அதை அடைக்க கோபாலபுரம் வீட்டை அடமானம் வைத்துவிட்டாராம் கருணாநிதி. பணத்தை செலுத்தாததால் அது ஏலத்துக்கு வந்திருக்கிறது. உடனே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் ‘எங்கள் தங்கம்’ படத்தில் வெறும் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்து கோபாலபுரம் வீட்டை கருணாநிதிக்கு மீட்டுக் கொடுத்தனராம். இதை நடிகர் ராதாரவியே சொல்லியிருக்கிறார். 

கருணாநிதியென்றால் கோபாலபுரம் இல்லம்! என்று ஆகிவிட்ட நிலையில் இந்த ஆச்சரிய அதிர்ச்சி தரக்கூடிய வரலாற்று தகவலானது தாறுமாறான ஒரு உண்மைதான்.