Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி... தொண்டர்கள் குதூகலம்!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

Karunanidhi Statue opening in soniagandhi
Author
Chennai, First Published Dec 16, 2018, 5:20 PM IST

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். Karunanidhi Statue opening in soniagandhi

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது.

Karunanidhi Statue opening in soniagandhi

 இதனையடுத்து அங்கு இருந்த அறிஞர் அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புணரமைக்கும் பணி நடந்தது. புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையோடு, புதிதாக நிறுவப்பட்ட கருணாநிதி சிலையையும் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி  விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ரஜினிகாந்த், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். Karunanidhi Statue opening in soniagandhi

சிலை திறப்பு விழா நிறைவடைந்ததை அடுத்து சோனியாகாந்தி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். அதன்பின்னர் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவை சிறப்பாக நடத்த திமுக ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த திறப்புவிழா நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios