80 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் சாணக்கியனாக விளங்கியவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது பூத உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் கருணாநிதியின் ஜாதகம் அவர் மரணித்த நாள் நேரம் உள்ளிட்டவற்றை நெல்லை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.

தமிழர்களின் அணையா விளக்கு

கலைஞர் மறைவு 7/8/2018 மாலை 6.10 மணி மிருகசிரீடம் நட்சத்திரம்

என் கே வி முறையில் ஓர் ஆய்வு

கலைஞர் மறைந்த நாள்

சந்திரனுக்கு அட்டமத்தில் சனிபகவான்
தமிழுக்கு அட்டமத்தில் சனி பகவான் 
அமர்ந்ததால் தமிழுக்கு நஷ்ட்டம்

ராகு கேது பிடியிலின்று சந்திரன் வெளியே இருப்பதால் சந்திரனுக்கு அமுதன் என்றும்,தமிழுக்கு அமுதன் என்ற பெயரும் உண்டு.

எனவே தமிழ் மூலமாகவே வளர்ந்தவர்.
சக்தி வீதியில் சந்திரன் அமைந்தது சிறப்பாகும்.

சக்தி வீதி என்பதுகடகத்திலிருந்து அப்பிரதட்சணமாக கும்பம் வரை உள்ள ராசிகளாகும்.இது சக்தி வீதியாகும்.

பிரதட்சணமாக சிவவீதி என்பது சிம்மம் முதல் மகரம் வரை உள்ள ராசியாகும்.இதில் ராகுகேது பிடியில் சிக்காமல் சிவவீதியில் சுக்கிரன்,குரு,சனி கிரகங்கள்அமர்ந்து உள்ளனர்..

சுக்கிரனுக்கு…….கலைஞர் என்று பெயர்
குருவுக்கு…நிதி,தனகாரகன் என்று பெயர்.
சனிக்கு…..கருணை என்று பெயர்

எனவே அவர் இந்த காலகட்டத்தில் மரணம் அடைந்தார்.

இதில் சுக்கிரனுக்கு….பத்மாவதி அம்மாள் என்றும்
குருவுக்கு…..ராஜாத்தி அம்மாள் என்றும்
சனிக்கு….தயாளு அம்மாள் என்றும்

இப்பெயர்கள் அனைத்தும் கிரகங்கள் தன்னுள் கொண்டுள்ளது என்பதை உறுதி படுத்துகிறது.

பகுத்தறிவு ஆய்வு…பக்தியறிவு ஆய்வு…..அனைத்தும் ஜோதிட அறிவு ஆய்வுக்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

விருச்சிகத்திலிருந்து சனி பெயர்சியாகி தனுசில் குரு வீட்டில், சனி பெயர்சியாகி கருணை பெயர்சியாகி கருணாநிதியாகி மகர லக்னத்திற்கு பன்னிரென்டாம் வீட்டில் மறைந்ததால் கருணாநிதி அவர்கள் மறைந்தார்.

ஆக சந்திரன்,சனி,குரு,சுக்கிரன்,செவ்வாய் காரகத்துவங்கள் மரணத்திற்கு முன்னும்,பின்னும் உள்ள நிகழ்வுகளை காரகத்துவங்கள்மூலமாக வெளிபடுத்துகிறது.

சனிக்கு….கருணை என்ற காரகத்துவம்

குருவுக்கு….நிதி….தனகாரகன்.என்ற காரகத்துவம்

கருணைக்கு மறுபெயர் …தயாளு என்ற பெயரும்

குரு சுக்கிரன் வீட்லே அமர்ந்ததால்…ராஜாத்தி அம்மாள்

சுக்கிரன்…சூரியன் நட்சத்திரமான…உத்திரம் நட்சத்திரம்,

செவ்வாய்…சூரியன்…நட்சத்திரமான..உத்திராடத்திலும்…….

.சூரியநட்சத்திரத்தில் …இரு கிரகம் அமர்ந்துள்ளதால் இந்த தொடர்புக்கு பத்மம் என்று பெயர்.

மகர லக்கணத்தில்…மறைந்தார்..கலைஞர்

மகர லக்கணத்திற்கு பதினாறாம் இடம் மூத்த சகோதரம்…அண்ணாவை குறிக்கும்.
அது கேதுவுடன் அமர்ந்துள்ளதால் அண்ணாசமாதி குறிக்கும்.

காரணம் செவ்வாய் கேது இணைவு சனி வீட்டில்.பொதுவாக கும்பம் என்பது சமாதியை குறிக்கும்.

கும்பத்தை சனி மூன்றாம் பார்வையிட, குரு ஐந்தாம் பார்வையாக கும்பத்தை பார்வை செய்வதும்,சனி யாகியகருணையும் குருவாகிய நிதியையும்,கும்பத்தை பார்வை செய்வதாலும் மகரம் என்பது கடற்கரையை குறிப்பதாலும் கடற்கரையில் அண்ணாசமாதி அமைந்ததும்,
கும்பத்தை குருவும் சனியும் பார்ப்பதாலும்,அண்ணாசமாதியருகே இவரது நினைவிடம் அமைய வாய்ப்பு கிடைத்தது.

கிரகங்கள் வெற்றி கண்டன.

ராகுகேது பிடியில் வெளியே சந்திரன்,செவ்வாய் நட்சத்திரத்தில்…மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ளது.

செவ்வாய்…..முருகன்….வேலன்
சந்திரன்……முத்து
இவருடைய தந்தை பெயர்…முத்துவேலன்
மகர லக்கணத்திற்கு ஐந்தில் சந்திரன்

தமிழர்கள் இருக்கும் வரை இவரது பெயரை தமிழனின் உதடுகள் உச்சரிக்கும்.