80 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் சாணக்கியனாக விளங்கியவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது பூத உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல்  உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் காலை மு.க. ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மீண்டும் மாலை கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு, கனிமொழி, ராஜாத்தியம்மாள், உதயநிதி, அருள்நிதி உட்பட குடும்பத்தினர் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  ஆனால் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் முக முத்து மட்டும் அஞ்சலி செலுத்த வரவில்லை,

இந்நிலையில், உடல்நலம் சரியில்லாமல் தன் வீட்டிலேயே நீண்ட நாள்களாக இருந்துவரும் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, கருணாநிதியின் மறைந்த செய்தி சொல்லப்பட்டதும்  இரவு கோபாலபுரம் வீட்டிற்க்குள் வந்து தந்தையின் உடலைப்பார்த்து கண்கலங்கி அழுதுள்ளார். இதனையடுத்து, சிஐடி காலனிக்கு கொண்டு சென்று அங்கிருந்து ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அதன் பின்னர் அவரது பூத உடல் மெரினாவில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொண்டர்களும் குடும்ப உறுப்பினரும் சாமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், கருணாநிதியின் மூத்தமகன் மட்டும் வரவில்லை உடல் நலம் குன்றி இருக்கும் அவரை இன்று காலை கைத்தாங்கலாக கூட்டி வரப்பட்டு அஞ்சலி செலுத்த வைத்தனர். தந்தையின் சமாதியில் மூத்த மகன் முத்து கண்கலங்கி அழுதார்.

கடந்த,  எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்படத் துவங்கியபோது, எம்ஜிஆர் புகழின் உச்சியில் இருக்கும் போதே அவரைப்போலவே முத்துவையும் கதாநாயகனாக  களம்  இறக்கப்பட்டார், கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, அதைத் தொடர்ந்து தி.மு.க. மேடைகளிலும் பயன்படுத்தப்பட்டார். ஆனால் அவரால் இரு துறைகளிலுமே சோபிக்க முடியவில்லை, கடந்த சில ஆண்டுகள் ஆண்டுகளாக உடல் நலிவுற்று இருந்த இவரை தற்போது தந்தை மறைந்ததும் வெளியில் அழைத்து வந்திருக்கின்றார்கள்.