Asianet News TamilAsianet News Tamil

தமிழறிஞர்களை அசிங்கப்படுத்தியது கருணாநிதி குடும்பம்... மதுரையில் பிறந்த அந்தம்மாவால் தமிழுக்கு பெருமை... செல்லூர் ராஜூ அடாவடி பேச்சு..!

தன் குடும்பத்தினரை மட்டும் முன் இருக்கையில் அமர வைத்து மாநாடு நடத்தியவர் கருணாநிதி. 

Karunanidhi insulted tamil language says Selur Raju
Author
Tamil Nadu, First Published Jan 28, 2020, 3:11 PM IST

தமிழறிஞர்களை அசிங்கப்படுத்தியது கருணாநிதி குடும்பம்... மதுரையில் பிறந்த அந்தம்மாவால் தமிழுக்கு பெருமை... செல்லூர் ராஜூ அடாவடி பேச்சு..!

பிரதமர் மோடியே தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகவும், தமிழறிஞர்களை கருணாநிதி அவமானப்படுத்தியதாகவும்  அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது திமுகவினரை ஆத்திரப்படுத்தி உள்ளது.மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க  நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘’மொழிப்போர் என்பது சாமானிய மக்களும், மாணவர்களும் பொது வாழ்விற்கு வர வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்கள் அறிவித்து நடத்திய போராட்டம் அது.

Karunanidhi insulted tamil language says Selur Raju

அறிஞர் அண்ணா போராடினார், தந்தை பெரியார் சிறு வயதிலிருந்தே தமிழுக்காக போராடினார். மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக 47 வருடங்கள் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டத்தை நடத்தி வருகிறது. எம்.ஜி.ஆர், திரைப்படத்தில்கூட தன்னுடைய எதிரி தன்னை போல் பலமாக இருக்க வேண்டும் என்று எண்ண கூடியவர், அதன் அடிப்படையில் தான் தனது அரசியல் எதிரியாக கருணாநிதி எதிர் கொண்டார் எம்.ஜி.ஆர்.

எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அதனால் தான் இந்திய பிரதமர் மோடி ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’கனியன் பூங்குன்றனார் பொன்மொழி, திருக்குறள் போன்றவற்றை எடுத்து கூறி பேசுகிறார். நமது தமிழ் மண்ணில் மதுரையில் பிறந்தவர் தற்போதய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். இவர் அமைச்சராக இருப்பது தமிழுக்கு பெருமை. அந்த பெருமையை சேர்த்தது அ.தி.மு.க அரசு தான்.

Karunanidhi insulted tamil language says Selur Raju

எம்.ஜி.ஆர் நடத்திய உலக தமிழ் மாநாட்டை உலகில் உள்ள தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஆதரித்தார்கள். ஆனால் கலைஞர் நடத்திய செம்மொழி மாநாடு எனும் உலக தமிழ் மாநாட்டை , உலக தமிழ் மாநாட்டை அங்கீகரிக்கும் அமைப்புகளே அங்கீகரிக்க வில்லை.

Karunanidhi insulted tamil language says Selur Raju

கோவை செம்மொழி மாநாட்டில் கலைஞர் உலகெங்கிலும் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை மரியாதை ,மதிப்பின்றி நடத்தினார் கலைஞர். தன் குடும்பத்தினரை மட்டும் முன் இருக்கையில் அமர வைத்து மாநாடு நடத்தியவர் கருணாநிதி. தி.மு.க. ஒரு குடும்ப கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.வில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பதவியும் வாய்ப்பும் கிடைக்கும்’’எனப் பேசியுள்ளார். இந்தப்பேச்சு திமுகவினரை ஆத்தரப்படுத்தி உள்ளது. 

-தெ.பாலமுருகன்

Follow Us:
Download App:
  • android
  • ios