வயோதிகம் மற்றும் சிறுநீரக தொற்று  காரணமாக உடல் நலக்குறைவு  ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு  தற்போது கோபாலபுரம் வந்துள்ளது. இதையடுத்து கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிவீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் பதற்றத்துடன் குவிந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மருத்மதுவமனையில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக  வதந்தி பரவியது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிடோர் கோபாலபுரத்துக்கு நேரடியாக வந்து நலம் விசாரித்துச் சென்றனர். அலும் பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும் கோபாலபுரம் வந்து சென்றனர்.

அவரது உடல் மருந்தை ஏற்க மறுக்கிறது… அவரை மருத்துவமனையில் அனுமதி காவேரி மருத்துவமனை மறுத்துவிட்டது என அபல தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன.

இந்நிலையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து 4 டாக்டர்கள்  அடங்கிய குழு தற்போது கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு அவசரமாக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று  நள்ளிரவுக்குப் பிறகு கோபாலபுரத்தில் இருந்து தனது ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென்ற செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மீண்டும் கோபபாலபுரம் இல்லம் வந்து சேர்ந்துள்ளார்.

இதையடுத்து கருணாநிதி வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் பதற்றத்துடன் குவிந்து வருகின்றனர்.