கருணாநிதிக்காக கதறி அழுத கலைஞர் அரங்கம்… உணர்ச்சிப் பிழம்பான அவசர செயற்குழுக் கூட்டம்….
திமுகதலைவர்கருணாநிதிகடந்த 7-ம்தேதிமறைந்ததையடுத்து அக்கட்சியின் செயல்தலைவர்மு.க.ஸ்டாலின்தலைமையில்கட்சியின்அவசரசெயற்குழுகூட்டம்தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னைஅண்ணாஅறிவாலயத்தில்நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் பேராசிரியர்க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம்தென்னரசு, அன்பில்மகேஷ்உள்ளிட்டோர்திமுகசெயற்குழுஅவசரகூட்டத்தில்பங்கேற்பு.

திமுகஎம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள்எம்.எல்.ஏக்கள்சிறப்புஅழைப்பாளர்களாகபங்கேற்றுள்ளனர். தலைமைசெயற்குழுஉறுப்பினர்கள், மாவட்டசெயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநிலநிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர். கூட்டம்அதிகரித்ததால்அரங்கம்நிரம்பிவெளியேநிர்வாகிகள்அமர்ந்துள்ளனர். அவர்கள்வசதிக்காகஎல்இடிடிவிகள்வைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில்கட்சியின்தலைவர்கருணாநிதியின்மறைவுக்குஇரங்கல்தெரிவித்துதீர்மானம்நிறைவேற்றப்பட்டது.இரங்கல்தீர்மானத்தைடி.கே.எஸ். இளங்கோவன் கண்ணீருடன் வாசித்தார்.
இதையடுத்து அந்த கூட்டத்தில்கருணாநிதிமறைவுக்குஒருநிமிடம்மவுனஅஞ்சலிசெலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய தலைமை நிலையச் செயலாளர் துரை முருகன் கருணாநிதியுடன்ன தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அரங்கில் இருந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தேம்பித் தேம்பி அழுதனர்.

இதையடுத்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அழுது கொண்டே பேசினார். திமுகவின் முதன்மை நிர்வாகிகள் அனைவரும் அழுது கொண்டே பேசினார்கள். தொடர்ந்து கருணாநிதிக்காக அந்த கலைஞர் அரங்கமே அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
