திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திமுக தொண்டர்கள் அலை அலையாய் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சமாதியில் பழங்கள் மற்றும் பூக்களால் உதயசூரியன் போல் அலங்கறிக்கப்பட்டது. இது பார்ப்போரை வியப்படைய செய்துள்ளது. முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

உடல் அடக்கம் செய்யப்பட்ட கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அலை அலையாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர் இறந்து 4 நாட்களிலேயே அவரது சமாதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி சமாதியை சுற்றிலும் வண்ண மையமாக அலங்கறிக்கப்பட்டுள்ளது. அவரது சமாதியில் பழங்கள் மற்றும் பூக்களால் உதயசூரியன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சமாதியை சுற்றிலும் கிரானைட் கற்கள் புதைக்கப்பட்டு மிக அழகான பொலிவுடன் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் கண்டு செல்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மிக விரைவில் அவரது சமாதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.