மாறியது கலைஞரின் பேஸ்புக் பக்க புரோபைல்..!

பல ஆண்டுகளாக ஒரே பேஸ்புக் புரோபைல் வைத்திருந்த கலைஞரின் பேஸ்புக் பக்கம், இன்று வேறு ஒரு புரோபைல் படம் வைத்து மாற்றப்பட்டுள்ளது.மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் நேற்று மாலை மெரீனா அண்ணா நினைவகம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது 

 

இந்நிலையில், இன்று அவர் பயன்படுத்தி வந்த பேஸ்புக் பக்கத்தில், புதிய புரோபைல் வைக்கப்பட்டு உள்ளது.அதில், கலைஞர் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்திய, சக்கர  நாற்காலியில், மஞ்சள் துண்டு மற்றும் கண்ணாடி உள்ளது போன்ற ஒரு  படம் வைக்கப்பட்டது.

பின்பு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மேலும் கலைஞரின் வேறு  ஒரு புகைப்படத்தை வைத்து உள்ளனர்.பல ஆண்டுகளாக ஒரே படத்தை புரோபைலாக வைத்திருந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு தற்போது புரோபைல் மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய படத்தை பார்த்த தொண்டர்கள் அவரது புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.