திமுக தலைவர் கருணாநிதி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

கடந்த 11  நாட்களாக  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  திமுக தலைவர் கருணாநிதி காலமானார் என்ற செய்தி ஒட்டு மொத்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி, மகள் செல்வி, துர்கா ஸ்டாலின் என அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து கண்ணீரோடு கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினர் 

காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுர இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அவரது உடலை ராஜாஜி ஹாலில் பொதுமக்களின்  பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

கலைஞரின்  மறைவை ஏற்க முடியாத,தொண்டர்கள் காவேரி மருத்துவமனையின் எதிரே கதறி அழுகின்றனர்.  தமிழகம் முழுவதும்  உள்ள தொண்டர்கள்  மற்றும் பொதுமக்கள்  தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். இவருடைய மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்