Karunandhi is the best knowledgeble person in india...Anbazhagan speech
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல ஒரு அரசியல் தலைவர் யாருமில்லை என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உருக்கத்துடன் பேசினார்..
திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவத பிறந்தநாள் விழா மற்றும் அவரின் சட்டமன்ற பொன்விழா சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார். கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவரான அன்பழகன் தனது நண்பர் குறித்து உருக்கமுடன், நா தழுதழுக்க பேசியது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

பெரியார் காலம் தொடங்கி அரசியலில் தங்கள் இருவரின் மலரும் நினைவுகளை குறித்து அன்பழகன் மேடையில் பேசினார்.
இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதியைப் போல ஒரு தலைவரை தான் பார்த்ததேயில்லை என்றார்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல ஒரு அரசியல் தலைவர் இல்லை என்று தெரிவித்தார்.

நேரு, அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட தலைவர் கருணாநிதிதான் என்று பாராட்டிய அன்பழகன்,. அண்ணாவை விட மிகப்பெரிய தலைவராக கருணாநிதி உருவெடுத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
கடும் வயோதிகத்திலும் தனது நண்பர், கலைஞர் கருணாநிதியைப் பற்றி பேசிய போது நா தழுதழுக்க பேசினார்,
