Karunandhi is best friend of our family...kashmi Ex CM Omar Abulla speech

60 ஆண்டுகள் தொடர்ந்து அரசியல் பணி என்பது யாரும் எதிர்பார்க்க முடியாதது. கருணாநிதியைப் போன்று இந்த சாதனையை இந்தியாவில் வேறு யாரும் செய்யவில்லை என்றும், செய்யவும் முடியாது என்றும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா பேசினார்

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா சென்னையில் நேற்று நடைபெற்றது

அதில் பங்கேற்றுப் பேசிய , ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, கடந்த 3 தலைமுறைகளாக கருணாநிதி குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல உறவு உள்ளது. எனது தாத்தா, தந்தை, இப்போது நான்... இந்த மூன்று தலைமுறையினருடனும் கருணாநிதி உறவாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

. 60 ஆண்டுகள் தொடர்ந்து அரசியல் பணி என்பது யாரும் எதிர்பார்க்க முடியாதது. இந்த சாதனையை இந்தியாவில் யாரும் செய்யவில்லை, செய்யவும் முடியாது என்று கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

 தற்போது நாட்டு மக்களுக்கு சிக்கலான நேரம் வந்துள்ளது. நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் மத்திய அரசை தாக்கிப் பேசினார்.

தற்போதுள்ள மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் மோசமாகவும், , பயங்கரமாக உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இல்லாத அரசை கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை நாம் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும், அதற்காக நாம் ஒற்றுமையான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்..