திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி வெளியானதும் பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது 

கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய திமுக சார்பில் ஸ்டாலின்  முதல்வரை சந்தித்து, மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .பின்னர் மறைவு குறித்த அறவிப்பு வெளியானதும், தற்போது தமிழக  அரசு சார்பில், கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என அறிக்கை வெளியிட்டது.

ஆனால், கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்றும், இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல்வேறு சட்ட சிக்கல் உள்ளதகவும் கிரிஜா  வைத்தியநாதன் தெரிவித்து இருந்தார் இதனடிப்படையில் தற்போது, மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.