புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக் வீட்டிகு தொடர் மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

 

மனித உரிமை காக்கும் கட்சியை நடத்தி வருகிறார் நடிகர் கார்த்திக். இந்த தேர்தலில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். அதிமுக கூட்டணி ஆதரவு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடியில் தமிழிசை, மதுரையில் ராஜ் சத்யன், என ஒவ்வொரு தொகுதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதிமுக கூட்டணியில், தென்காசி தொகுதியில் போட்டியிடுகிற புதிய தமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக சமீபத்தில், கார்த்திக் முதல் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு தென்காசி தொகுதியில் இருக்கும் மனித உரிமை காக்கும் கட்சியினர் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பி விட்டது.

நடிகர் கார்த்திக் வீட்டுக்கே போனை போட்டு, 'அண்ணனை, மறுபடியும் தென்காசி பக்கம் வரவேண்டாம்னு சொல்லுங்க. வந்தா மண்டை உடையும்' என மிரட்டும் தோரணையில் பேசுகிறார்கள். இதே போல் தினமும் நூற்றுக்கணக்கான போன்கள்ன் வருவதால் மிரண்டு போயுள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனால், அடுத்த கட்ட பிரசாரத்துக்கு போகலாமா? அல்லது வழக்கம் போல, தலைமறைவாகி விடலாமா என கார்த்திக், தீவிர சிந்தனையில் இருக்கிறாராம். வெத்தலை போட்ட ஜோக்குல கார்த்தில் முகத்துல யாரும் குப்புன்னு மூக்கில் குத்தாமல் இருந்தால் நல்லது.