Asianet News TamilAsianet News Tamil

உச்சகட்ட பீதியில் கர்நாடக மக்கள்.!! ஒருபக்கம் கொரோனா , மறு பக்கம் பறவை காய்ச்சல்...!!

 கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .  கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது .  
 

Karnataka state very fear conscious regarding corona ans bird flue
Author
Chennai, First Published Mar 17, 2020, 2:47 PM IST

கேரளாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது .  இதனால் அங்குள்ள கோழிகளை அழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது .  ஏற்கனவே கொரோனா பீதியில் சிக்கி தவிர்க்கும்  கர்நாடக தற்போது பறவை காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பது அம்மாநில மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  கர்நாடகத்தை பொருத்தவரையில் கொரோனாவால் வைரசால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  அதேபோல் நாட்டின் முதல் கொரோனா உயிரிழப்பு  கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. கலப்புராக்கி மாவட்டத்தை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் மைசூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

 Karnataka state very fear conscious regarding corona ans bird flue

கேரள  மாநிலத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சலால் அங்கு பண்ணைகளில் இருந்த  கோழிகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.  அதேபோல் அம்மாநிலத்தில்  வௌவால் , குரங்கு  உள்ளிட்ட உயிரினங்களும் பறவைகாய்ச்சலால் கடுமையாக  பாதிக்கப்பட்டு ஆங்காங்கே மயங்கி விழுந்தன. இந்நிலையில் மைசூர் மாவட்டத்தில் கடந்த  12ஆம் தேதி உயிரிழந்த இரண்டு கோழிகளை ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டதில்  அந்த  கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  நேற்று அது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கை அடிப்படையில்  கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .  கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது .  

Karnataka state very fear conscious regarding corona ans bird flue

மைசூர் மாவட்ட ஆட்சியர் அபிராமி சங்கர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் . பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிக்கு  ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் உள்ள கோழிகளை ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார் .  அங்குள்ள குடியிருப்புகளில் மக்கள் வளர்க்கக்கூடிய கோழிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.   ஒருவேலை பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவைகளை அழிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .  அதுமட்டுமின்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மைசூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் யாரும் கோழி இறைச்சிகளை உண்ண வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார் .  ஏற்கனவே மக்கள் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் பரவியுள்ள பறவை காய்ச்சலால் அம்மாநில மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் .

 

Follow Us:
Download App:
  • android
  • ios