Asianet News TamilAsianet News Tamil

பிஜேபிக்கு ஆட்டம் காட்டிய மாஜி அமைச்சருக்கு ஆப்பு !! சிதம்பரம் ஸ்டைலில் தூக்க முடிவு !!


டெல்லி  வீட்டில் கைப்பற்றிய, 8.59 கோடி ரூபாய் பணம் தொடர்பாக, அமலாக்க துறையினர் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி, காங்கிரஸ். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்ய உள்ளனர்.

karnataka minister sivakumar
Author
Bangalore, First Published Aug 30, 2019, 9:22 AM IST

காங்கிரஸ். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, 2017 ஆகஸ்டில், இவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான, பெங்களூரு, ராம்நகர், மைசூரு, டில்லி என, 60க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் ஐந்து நாட்கள் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் காட்டப்படாத, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.மேலும், சிவகுமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில், 8 கோடியே, 59 லட்சத்து, 69 ஆயிரத்து, 100 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கான ஆவணங்களும் வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படவில்லை.

karnataka minister sivakumar

விசாரணையின்போது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கொடுக்க, சிவகுமார் அனுப்பிய ஹவாலா பணம்' என, அவரது உதவியாளர்கள் கூறியதாக தகவல் வெளியானது. ஹவாலா பணம் என்பதால், அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிவகுமார் அவரது உதவியாளர்கள் சச்சின் நாராயண், சுனில்குமார் ஷர்மா, ஆஞ்சநேயா ஹனுமந்தா, ராஜேந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் கடந்த பிப்ரவரியில் சம்மன் அனுப்பினர்.

சம்மனை ரத்து செய்ய கோரி, அவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். சிவகுமாருக்கு ஆதரவாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான கபில் சிபல் வாதாடினார். 

karnataka minister sivakumar

அமலாக்க துறை சார்பில் கூடுதல் சாலிசிடர் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி வாதாடினார். விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி அரவிந்த் குமார் அந்த மனுவை  தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, சிவகுமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, அமலாக்க துறையினர் தயாராகி வருகின்றனர். இதனால், எந்த நேரமும் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios