கர்நாடகாவில் பாஜகவில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா உத்தரவை மீறியதாக இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் 17 பேரும் 2023-ம் ஆண்டு வரை தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தார். 

சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேசமயம் அவர்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் அனுமதி அளித்தது. இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் முதல் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். 

சட்டப்பேரவையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களில் 13 பேரை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.