இபிஎஸ்-ஐ முந்தும் ஓபிஎஸ்.. மேலும் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவித்து அதிரடி.. எந்ததெந்த தொகுதி தெரியுமா?
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு தரப்பும் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கோலார், காந்தி நகர் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு தரப்பும் போட்டியிடுகின்றனர். நேற்று எடப்பாடி பழனிசாமி புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இன்று காலை ஓபிஎஸ் தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கோலார், காந்தி நகர் தொகுதிகளில் ஓ.பி.எஸ். வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 10-05-2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக
146. கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதியில்
. A. அனந்தராஜ் கர்நாடக மாநிலக் கழகத் தலைவர்
164. காந்தி நகர் சட்டமன்றத் தொகுதியில்
K. குமார் கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் நிறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.