தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தேடி வந்த முக்கிய பொறுப்பு.. தலைமை அறிவிப்பு..!
கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இந்த அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவு பெறுவதை அடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இந்த அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவு பெறுவதை அடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த முறை விட்டதை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2019 ம் ஆண்டு பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராக அண்ணாமலை பணியாற்றிய நிலையில், அங்குள்ள அரசியல் சூழல் அவருக்கு நன்கு புரியும் மற்றும் அவருடைய பணி அனுபவம் கைகொடுக்கும் என்பதால் என்பதால் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.