Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரி: பாஜக வேட்பாளர் யார்.? ஓரம் கட்டப்படும் பொன்னார்.!காங்கிரஸ் குடும்பத்தை களமிறக்கும் பாஜக...!

50ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சிட்டிங் எம்பியாக இருந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.இதனால் அங்கு எம்பிக்கான இடம் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் பாஜக தலைமை கடைக்கண் பார்வை கிடைக்காமல் பொன்னார் இருப்பதாகவும் அதேநேரத்தில் நயினார் நாகேந்திரனும் பொன்.விஜயராகவனும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிற தகவலும் தற்போது கசிந்திருக்கிறது. இதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் பொன்னார்.

Kanyakumari Who is the BJP candidate? Gold to be built on the sidelines.! BJP to field Congress family ...!
Author
Kanniyakumari, First Published Sep 13, 2020, 11:51 AM IST

50ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சிட்டிங் எம்பியாக இருந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.இதனால் அங்கு எம்பிக்கான இடம் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் பாஜக தலைமை கடைக்கண் பார்வை கிடைக்காமல் பொன்னார் இருப்பதாகவும் அதேநேரத்தில் நயினார் நாகேந்திரனும் பொன்.விஜயராகவனும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்கிற தகவலும் தற்போது கசிந்திருக்கிறது. இதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் பொன்னார்.

Kanyakumari Who is the BJP candidate? Gold to be built on the sidelines.! BJP to field Congress family ...!

முன்னாள் எம்பி வசந்தகுமார்:
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கோட்டை.அதனால் தான் வசந்தகுமார் சுமார் 2.5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் மகனை களமிறக்க காங்கிரஸ் கட்சி தலைமை ஆலோசனையில் ஈடுப்பட்டுவருகின்றது. ஆனால் வசந்தகுமார் குடும்பம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலை தற்போது இல்லை.காரணம் அவர்கள் காங்கிரஸ் கட்சிமீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். கட்சி தலைமைக்காக உண்மையாக உழைத்தவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றே கருதுகின்றனர் அவரது குடும்பத்தினர்.

பொன்ராதகிருஷ்ணன்:
10முறை பாஜக சார்பில் போட்டியிட்டவர்.இதில் 9முறை எம்பிக்கும் 1முறை எம்எல்ஏ தேர்தலில் களம் கண்டு தோல்வியடைந்தார்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு முறை மத்திய இணைஅமைச்சர்.2014ம் ஆண்டு பிரதமர் மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக வலம் வந்தார்.இருந்தபோதிலும் தன்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வில்லை."தவளை தன் வாயால் கெடும்" என்ற பழமொழி இவருக்கு சரியாக பொருந்தும். தொகுதிக்குள் மட்டுமல்ல ஊடகங்களிலும் ஏதாவது சர்ச்சையாக பேசிவிடுவார்.காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது ஜீலைமாதம் போராட்டம் ஒவ்வொரு ஜீலை மாதமும் தொடர்ந்து நடத்தினார்.அமைச்சரானது அந்த போராட்டத்தை கைவிட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பத்தியிருக்கிறது.

Kanyakumari Who is the BJP candidate? Gold to be built on the sidelines.! BJP to field Congress family ...!

 இவர் வராத துறைமுகத்திற்கு "புலி வருது புலிவருதுனு" சொன்ன மாதிரி மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஓதுக்காத நிலையில்  தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த நிதியை பயன்படுத்தி அடிக்கல் நாட்டுவிழா நடத்தினார்.இது தொகுதிமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் மக்கள் போராட்டமே நடத்தினார்கள்.தன் சொந்த கட்சிக்காரர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை.அவரைச்சுற்றி இருக்கும் ஒரு சிலருக்கு வேண்டுமானால் அவர் உதவி செய்திருக்கலாம் என்று  வெந்து நொந்து போய் இருக்கிறார்கள் பாஜக உண்மை தொண்டர்கள்.இடைத்தேர்தலில் எம்பி சீட் பெற்று வெற்றி பெற்று கபினட் அமைச்சராக வலம் வர வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார்.அதே நேரத்தில் வயதுமுதுமையின் காரணத்தை காட்டி கழற்றி விட இருக்கிறது பாஜக.

இந்த நிலையில் தனக்கு மீண்டும் எம்பி சீட் வேண்டும் என்று படையெடுக்கிறார் பொன்னார்.இந்த முறை இவருக்கு சீட் கொடுக்க பாஜக தலைமை ஆர்வம் காட்டவில்லை.தொகுதிக்குள் இவருக்கு இருக்கும் நல்ல பெயர்...., இவர் நின்றால் வெற்றி பெற முடியாது என்கிற மத்திய உளவு துறை ரிப்போர்ட்.., கட்சியினர் கொடுத்த வாக்குமூலம் எல்லாம் இவருக்கு மைனஸாக அமைந்துள்ளது.

Kanyakumari Who is the BJP candidate? Gold to be built on the sidelines.! BJP to field Congress family ...!

விக்டோரிய கவுரி:
இவர் அகில இந்திய பாஜக மாநில மகளிர் அணி தலைவர்.கடந்த எம்பி தேர்தலில் கன்னியாகுமரி எம்பி வேட்பாளராக விக்டோரியாகவுரி பெயர் இடம் பெற்றிருந்தது. கடைசி நிமிடத்தில் ராஜ்நாத்சிங் சிபாரிசில் பொன்னார் பெயர் இடம்பெற்றது.இவரும் எம்பி சீட் ரேசில் இருக்கிறார்.தற்போது இவருக்கு மத்திய அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பொன்.விஜயராகவன்:
இவர் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள எதிர்கட்சி தலைவர் பொன்னப்பநாடார் மகன் ஆவார்.விலவங்கோடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துவிட்ட நிலையில் சென்னையில் குடியிருந்து வரும் விஜயதரணிக்கு மணிசங்கர்அய்யர் சிபாரிசில் விஜயதரணிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விஜயராகவன் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டார். உடனடியாக அவருக்கு விவசாய அணி பிரிவு தலைவர் பதவி வழங்கியது பாஜக. விஜயராகவன் வளர்ந்து விடக்கூடாது என்பதில் பொன்னார் அதிக கவனம் செலுத்தி கண்காணித்துக்கொண்டார்.

Kanyakumari Who is the BJP candidate? Gold to be built on the sidelines.! BJP to field Congress family ...!

 3முறை காங்கிரஸ், ஜனதராகதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கிள்ளியூர் தொகுதியில் எம்எல்ஏவாக வலம் வந்தவர் விஜயராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு சொந்த மருகனிடம்  கிள்ளியூர் தொகுதியில் டெப்பாசிட் இழந்தார்.இந்த தோல்வி அவருக்கு அரசியல் வாழ்க்கையில் மனச்சோர்வை ஏற்படுத்தியது.இந்த நிலையில் மீண்டு அவரை பாஜக தட்டி எழுப்பியிருக்கிறது.இவரது மனைவி கிறிஸ்தவர். இவர் இந்து. இவரை குறி வைத்திருக்கிறது பாஜக தலைமை . தற்போது கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு நயினார் நாகேந்திரன் பொன். விஜயராகவன் இவர்கள் பெயர்கள் தான் இடம் பெற்றிருக்கிறது. இவர்களில் யாருக்கு சீட் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.!
 
Follow Us:
Download App:
  • android
  • ios