MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!

விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!

தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 09 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

குழு அமைக்காமலேயே கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை திமுக துவங்கி இருப்பதாக இருப்படுகிறது.பேச்சு வார்த்தையின் போது விசிக சார்பில் 10 தொகுதிகளை ஒதுக்க கேட்டதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக துவங்கி இருக்கும் நிலையில் திமுகவுக்கு எதிராக இருக்க கூடிய என்.டி.ஏ, அதிமுக தலைமையிலான அந்த கூட்டணியும் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ச்சியாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறது. புதிதாக இணைந்த டிடிவி. தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் திமுக இதுவரை பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என கூறினாலும் ஒரு பக்கம் திமுக கூட்டணியை சேர்ந்த கட்சியின் முன்னணி தலைவர்களும், மூத்த அமைச்சர்களும் தொடர்ந்து இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Asianet News

கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொங்குநாடு மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. மொத்தமாக வெரும் தொகுதி எண்களை உறுதி செய்த பிறகு அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதி என்பது கூட்டணி பேச்சு வார்த்தை மூலம் தெரியவரும். தற்போது இந்த மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி, அவர்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இடங்கள் கொடுப்பது குறித்து பேசி வருகிறார்கள். தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சு வார்த்தை எளிதாக இருக்கும் நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை வந்து செல்லாமல் மூத்த அமைச்சர்கள் முன்கூட்டியே பேசும் பட்சத்தில் அனைத்து விதமான கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிவு பெற்று அந்த குழுவுடன் அமர்ந்து 3 நாட்களில் மொத்தமாக ஒப்பந்தம் செய்து இறுதி முடிவுக்கு வர உள்ளனர்.

Related Articles

Related image1
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் போட்ட 3-கண்டிஷன்ஸ்.. மண்டியிடுமா ஐசிசி..?
34
Image Credit : our own

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் புதிதாக திமுக கூட்டணிக்குள் வரவிருக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய தேவை திமுகவிற்கு இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கும் நிலையில், இதுவரை திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. அதற்கு காரணம், திமுக இன்னும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதே. ஆனால், ஏற்கனவே தொகுதி பங்கீட்டு குழுவில் யார், யாரை நியமிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது.

44
Image Credit : our own

கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், அந்த அறிவிப்பும் வெகு விரைவில் வரவிருக்கிறது. கடந்த தேர்தலைகளை பார்த்தாலும் திமுகவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்னரே, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த முறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும் என அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணிக்கான முடிவுகள், தொகுதி பங்கீடு என அனைத்தையும் முடித்துவிட திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. அதனால், அதற்கான பணிகள் திமுக தலைமையால் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் படலமும் தொடங்கியிருக்கிறது.

பிப்ரவரி இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு முடிவுகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்ததினமான மார்ச் 1ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
Recommended image2
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!
Recommended image3
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் போட்ட 3-கண்டிஷன்ஸ்.. மண்டியிடுமா ஐசிசி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved