கருணாநிதி மறைவிற்குப் பிறகு  திமுக இரண்டாக உடையும் அதில் கனிமொழி தலைமையில் கலைஞர் திமுக உருவாவது நிச்சயம் என உறுதியாக நம்பினர் பெரும்பாலான அரசியல் வல்லுனர்கள். அவர்களது நம்பிக்கைக்கு பின்னால் உண்மைகள் இல்லாமல் இல்லை, காரணம் மகளிர் அணி செயாலாளர் என்ற இடத்தைப் பிடிக்க கனிமொழி பட்டப் பாடு அவருக்குத் தான் தெரியும். கருணாநிதி கூறியும் கனிமொழிக்கு அந்த பதவி எளிதில் கிட்டிட வில்லை. 

டெல்லியில் பல தலைவர்களிடம் கனிமொழி புலம்பிய சம்பவங்களும் உண்டு குறிப்பாக தந்தையின் வாழ் நாட்ளுக்குப் பிறகு தனது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்குமோ? தனக்காக கட்சியில் இனி யார் பேசுவார்கள்? சில நேரங்களில் தன்னை அறியாமல் கதறியதாகவும் தகவல் வந்தது. அரசியல் எதிர்காலம் பற்றிய கவலை கனிமொழிக்கு மிக அதிகமாகவே இருந்தது அப்போதைய சூழ்நிலையில் கனிமொழி கவலைக்கு நியாயமும் இருந்தது. தயாநிதிமாறன் போன்றோரின் கை திமுகவில் ஓங்கியிருந்த நேரத்தில் , கனிமொழிக்கு கட்சியில் பின்னடைவு இருந்தது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு திமுகவில் ஒற்றுமை இருக்காது. பிளவு ஏற்பட சாத்தியம் என அரசியல்  விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவியது.

இந்நிலையில்  திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அழகிரி தான் போர்க்கொடி தூக்கினாரே தவிர, கனிமொழி எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டவில்லை, கனிமொழி எப்படியும் தன்பின்னால் வருவார் என நம்பியிருந்த அழகிரிக்கு கனிமொழி எந்த ரியாக்ஷனும் காட்டாதது பெரும் ஷாக். என்னதான் கனிமொழிக்கு சின்ன சின்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் எதற்க் கெடுத்தாலும் அண்ணனைக் கேட்டு செல்கிறேன் அண்ணனைக் கேட்டு சொல்கிறேன் எனச் சொன்னாராம்.

இதற்கிடையில், இந்த இடைப்பட்ட நேரத்தில் சந்தில் சிந்துபாடும் வகையில் சிலர் ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும்  சிண்டுமுடிக்கும் வேலையில் ஈடுபட்டனராம் . ஆனால் என்ன நடந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனவும் தனது அண்ணன் ஸ்டாலின் பின்னால் இருப்பது என முடிவெடுத்துவிட்டாராம் கனிமொழி. இதனால் கலைஞர் திமுக உருவாகும் சந்தில் சிந்து பாட நினைத்தவர்களுக்கு பெரும்  ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்த நிலையில் இன்று தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அண்ணா சமாதிக்கு சென்ற ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில்  அஞ்சலி செலுத்திவிட்டு  பேராசிரியர் அன்பழகன் மற்றும் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின் கனிமொழியிடம் தொலைபேசியில் பேசினாராம். 

இதனையடுத்து இதையடுத்து சிஐடி காலனியில் உள்ள வீட்டிலிருந்து  அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கனிமொழி தந்தைக்குப் பிறகு திமுகவிற்கு தலைவராகும்  தனது அன்பு அண்ணன் ஸ்டாலினுக்கு பாச முத்தமிட்டு தனது பாசத்தை வெளிபடுத்தினார்.  ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்த புகைப்படம் பதில் சொல்லிவிட்டது.  திமுக வரலாற்றில் பெரும் திருப்புமுனையையும் ஏற்படுத்திவிட்டது.