திமுகவில் எத்தனை அணிகள் உருவானாலும் தான் தலைமையேற்றுள்ள மகளிர் அணியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் நம்பிக்கைக்குரிய தலைவியாக அவர் இருந்து வருகிறார். 

மகளீர் தின விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அலங்கரிக்கப்பட்ட பறை இசைக் கருவியை பரிசாக வழங்கியுள்ளார். அதில் பெண்கள் சாதித்த பல துறைகளில் புகைப்படங்கள் அடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்த பரிசை வழங்கினார். அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

திமுகவில் எத்தனை தலைவர்கள் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளவர் ஒருவர் உண்டென்றால் அது கவிஞர் கனிமொழியாகத்தான் இருக்கும். எவரிடமும் கனிவுடன் பேசுவது, எதிலும் தெளிவுடன் துணிந்து செயலாற்றுவது, எளிய தொண்டர்களும் எளிமையாக அணுக இயலுவது கனிமொழியின் தனிச்சிறப்பு. எப்போதும் தான் கலைஞர் கருணாநிதியின் மகள் என்ற பெருமை அவருக்கு இருந்தாலும், அதை எவரிடத்திலும் தலைக்கனமாக வெளிப்பட்டதில்லை என்பது அவரின் சிறப்பிலும் சிறப்பு. 

திமுகவில் எத்தனை அணிகள் உருவானாலும் தான் தலைமையேற்றுள்ள மகளிர் அணியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் நம்பிக்கைக்குரிய தலைவியாக அவர் இருந்து வருகிறார். சமூகநீதி, இட ஒதுக்கீடு மாநில சுயாட்சி பேசிப் பேசி வளர்ந்த இயக்கத்தின் கொள்கை வாரிசாக நீள்கிறார் கனிமொழி என்றால் மிகைல்ல. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத கலைஞர் கருணாநிதியை போலவே கொள்கையில் உறுதிப்பாடு மிக்கவராகவே வளம் வருகிறார் கனிமொழி. அதனால் இன்றளவும் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தொண்டர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் அவர் எனலாம்.

பெண்ணுரிமை, சமூக நீதி, தலித் ஒடுக்குமுறை, ஆணவக்கொலை என எந்த அநீதிக்கும் திமுகவின் முதல் குரலாக ஒலிப்பது கனிமொழியின் குரல்தான் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்ணுரிமைக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக எவர் பேசினாலும், ஏன் தனது சொந்த கட்சியினரே பேசினாலும் அதை முதலில் எதிர்ப்பவர் கனி மொழியாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு கொள்கையில் உறுதி கொண்டவர் அவர்.

இந்நிலையில் திமுக மகளிர் அணியின் சார்பில் சர்வதேச மகளிர் விழா கனிமொழி தலைமையிலான மகளிரணியினர் இன்று முன்னெடுத்தனர். இந்நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா, சமூக நலத்துறை, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மகளிர் ஆணைய தலைவர் குமாரி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அவர்கள் வியக்கும் வகையில் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பறை இசைக் கருவியை பரிசளித்தார். அதில் பெண்கள் சாதித்த பல துறைகளில் புகைப்படங்கள் அடங்கியுள்ளது. அது விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த பலரும் அவரை பாராட்டி மகிழ்ந்தனர். இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்த பரிசு பொருட்கள் மதிப்பு மிக்கதாக, விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணுவர்.

ஆனால் இயல்பிலேயே கலை, கலாச்சாரம், பண்பாடு என வளர்ந்த கனிமொழி ஆதி தமிழர் இசைகளில் ஒன்றான பறை இசையின் அடையாளமாய், பெண் விடுதலை முழங்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட பறை இசைக் கருவியை வழங்கியுள்ளார். இது கனிமொழியின் பண்பாட்டை , கலை உணர்வை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.