*    தனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாக நடிகர் ரஜினி கூறுகிறார். அவரின், அடுத்த படம் வெளியாகப்போகிறது. அதனால்தான் அவர் இந்த அறிக்கையை கொடுத்ததாக மக்கள் கூறுகின்றனர். 
-    பிரேமலதா விஜயகாந்த்.

*    ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன் மாணிக்கவேல் கூறும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை. யுரேனியம் தொடர்பான பேச்சின்போது, பிரதமர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்,ன் இந்தியாவிலிருந்து முன்பு கடத்தப்பட்ட அந்த சிலைகள், திரும்ப ஒப்படைக்கப்பட்டன. 
-    ஐகோர்ட்டில் தமிழ அரசு. 

*    நாட்டின் பொருளாதார நிலை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. பா.ஜ.க.  தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம். மத்திய அரசை கண்டித்து கேரளா முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்திட முடிவு.
-    உம்மன் சாண்டி.

*    உள்ளாட்சி தேர்தல்கள் இன்னமும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இதில் போட்டியிட விரும்புவோரை அறிய, விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட உள்ளன. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இந்த மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். 

*    தமிழக்த்தில் ஆளுமை மிக்க தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது! எனக் கூறியது, நடிகர் ரஜினிதானே! அவர் எந்த கட்சியின் தலைவர்? அவர் ஒரு நடிகர். அரசியல் தலைவர்கள் யாராவது இப்படி கூறியுள்ளனரா? அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூறுவதை பற்றி நாம்  கவலைப்பட தேவையில்லை. 
-    எடப்பாடி பழனிசாமி

*    அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சர்வதேச ரைசிங் ஸ்டார்! தங்கத் தமிழ்மகன்! உள்ளிட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
-    பத்திரிக்கை செய்தி

*    தி.மு.க. ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை. அது போல, தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் எந்த கட்சியும், தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்காது
-    பொன்.ராதாகிருஷ்ணன்

*    பருவ மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால், வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. வெங்காயம் மட்டுமின்றி அனைத்து காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 
-    அமைச்சர் காமராஜ்.

*    அ.தி.மு.க.விலிருந்து சில சூழ்நிலைகளால் வெளியேறியவர்கள்தான் தினகரனின் அ.ம.மு.க.வினர். அவர்களுடன் இணைந்து நாம் பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் நாம் வெற்றி பெற, அனைவருடனும் இணைந்து பணியாற்றிட வேண்டும். 
-    உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.

*    சர்வாதியாக மாறுவேன்! என எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லத்தான். அதை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், பார்ப்பதும் மிக தவறு. உட்கட்சி ஆரோக்கியத்துக்காக சொல்லப்பட்ட வார்த்தை அது
-    கனிமொழி