Asianet News TamilAsianet News Tamil

போட்டியின்றி தேர்வான கனிமொழி, ராஜேஷ்குமார்.. மாநிலங்களவையில் பலம் கூடியது.. கெத்து காட்டப்போகும் திமுக.!

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் தங்களது எம்பி பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். எனவே அவர்களின் இடங்கள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Kanimozhi Somu and Rajesh Kumar of DMK were elected unopposed as members of the Rajya Sabha
Author
Tamil Nadu, First Published Sep 27, 2021, 3:40 PM IST

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் தங்களது எம்பி பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். எனவே அவர்களின் இடங்கள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Kanimozhi Somu and Rajesh Kumar of DMK were elected unopposed as members of the Rajya Sabha

அதனைத் தொடர்ந்து திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக டாக்டர் கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் கடந்த 21ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

Kanimozhi Somu and Rajesh Kumar of DMK were elected unopposed as members of the Rajya Sabha

இதுவரை வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால் திமுக வேட்பாளர்களான கனிமொழியும், ராஜேஷ் குமாரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios