சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரிடம், தி.மு.க., மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.,யுமான கனிமொழி, 'எனக்கு, ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள்' என சொன்னதும், அவர், 'ஹிந்தி தெரியாத நீங்க, இந்தியரா' எனக் கேள்வி கேட்டார் என ஒரு விவகாரம் எழுந்தது.

''அது இப்போது பெரிய பிரச்னையாகி விட்டது. இது குறித்து கனிமொழி, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஹிந்தி, ஆங்கிலத்தோடு, தமிழும் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.மேலும், விமான நிலையத்தில், நம் தமிழ் மொழியில் அறிவிப்பும் ஒலிக்கிறது. இதனால், தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். கனிமொழிக்கும் பாராட்டு சொல்லி வருகிறார்கள்.