ராஜினாமா செய்தார் கனிமொழி..! 

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது மாநிலங்களவை எம்பி பதவியில் ராஜினாமா செய்துள்ளார் கனிமொழி

இவருடன் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத்தும் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர்.மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற நிலையில் மூவரும் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

இவருக்கு எதிராக பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். இதில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைத் தொகுதி எம்பியாக தேர்வானார் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி.

இந்நிலையில் இவர் ஏற்கனவே வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவருடன் அமித்ஷா மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களும் தங்களது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.