தற்போது மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அந்தப் பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அமித்ஷா, கனிமொழி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்களுடைய ராஜினாமாவை குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார். கனிமொழி ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

