17 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 67.1 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகபட்சமாக பதிவான வாக்குகள் இதுதான். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் திமுக தற்போது 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். 
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிரதம்பரம் அந்தத் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்

இதே நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, காஞ்சிபுரம்,நெல்லை உள்ளிட்ட 13 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் கோவை மற்றும் திருப்பூர்  தொகுதிகளில்  பாஜக மற்றும் அதிமுக வேட்பாள்கள் முன்னிலையில் உள்ளனப்ங