திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கைக்கு அண்ணன் ஸ்டாலின் இதனை அன்புப்பரிசாக வழங்குவதாகவும், தற்போது அந்தத் தொகுதியில் கனிமொழி போட்டியிட தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி பலமுறை மாநிலங்களவை உறுப்பினாக பணியாற்றி வருகிறார். ஆனால் ஒரு முறை கூட நேரடியாக அவர் தேர்தல் களத்தை சந்தித்ததில்லை.

இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை கனிமொழி ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
கன்மொழி தனது எம்.பி. நிதியில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அந்த கிராமம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள வெங்கடேசபுரம். அது மட்டுமல்லாமல் தூத்துக்குடிக்கு மாதம் ஒருமுறையாவது அவர் சென்று தொண்டர்களையும், பொது மக்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் மக்களிடம்சொல்வோம், மக்கள்மனங்களைவெல்வோம்என்றமுழக்கத்துடன்தமிழகம்முழுவதும்திமுகசார்பில்ஊராட்சிசபைக்கூட்டங்கள்நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், தூத்துக்குடிமாவட்டத்திற்குட்பட்டபகுதிகளில்கனிமொழிகலந்துகொண்டுமக்களை சந்தித்து பேசி வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகர், கருங்குளம், தூத்துக்குடிஆகியஒன்றியங்களுக்குட்பட்டபகுதிகளில்நடைபெறும்கூட்டங்களில்கலந்துகொண்டுமக்களின்குறைகளைக்கேட்கிறார். 27ஆம்தேதிவரைஇக்கூட்டங்களில்கனிமொழிகலந்துகொள்ளஉள்ளார். மொத்தம் 12 நாட்கள் கனிமொழி தூத்துக்குடியில் தங்கி இந்தக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
கனிமொழியின் இந்த தொடர் நடவடிக்கைகள் அவர் தூத்துககுடி தொகுதியில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
