மத்தியில் மோடி ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. பொதுவாக எண்ணிக்கை அடிப்படையில் துணை சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கூட கிடைக்காத நிலைதான் உள்ளது.

இந்நிலையில் பாஜக நினைத்தால் துணை சபாநாயகர் பதவியை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அந்தவகையில்  நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற முறையில் அந்தப் பதவியை  கனிமொழிக்கு கொடுக்கலாம் என பாஜக நினைக்கிறது.

ஆனால் திமுக தலைமை இதுவரை எந்தவித முடியும் எடுக்க முடியாம்ல் மௌனம் காக்கிறது. மு.க.ஸ்டாலின் இது குறித்து எதுவும் கூறாமல் இருக்கிறார்.. அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள கனிமொழிக்கும் விருப்பம் இருந்தாலும் அண்ணனின் பதிலுக்காக காத்திருக்கிறார்.

எற்கனவே நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை கனிமொழி கோட்டைவிட்ட நிலையில், இதையவது பிடிக்கலாம் என நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.