2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா மீண்டும் சிறைக்கு செல்வார்கள்.. ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்..!
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து ஸ்டாலின் கண்டுகொள்வதே இல்லை. சட்டம், ஒழுங்கை கவலைப்படாத பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் இனி கனவில் தான் வீடு கட்ட முடியும்.
திமுகவை பொறுத்தவரையில் தலைமைக்கு யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவரே சிறந்த அமைச்சர் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிக்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அகத்தியர் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய இபிஎஸ்;- தோல்வி பயம் காரணமாக ஆடு, மாடுகளை வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவினருக்கு தெம்பு, திராணி இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் கட்சி திமுக என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க;- வேண்டுமென்றே கனிமொழி இப்படி செய்யறாங்க.. இதுக்கு போலீசும் உடந்தை.. கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி..!
ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றினீர்களா என வாக்கு சேகரிக்க வரும் அமைச்சர்களிடம் கேள்வி கேளுங்கள். திமுகவை பொறுத்தவரையில் தலைமைக்கு யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவரே சிறந்த அமைச்சர். திமுக ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் அமைச்சர்கள் கொள்ளை அடித்ததுதான் மிச்சம். மக்கள் மீது வரியை சுமத்திவிட்டு திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக் கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொரோனாவை எதிர்கொண்டு மக்கள் உயிரை காத்ததில் தமிழ்நாடு முதலிடம்.
திமுக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பொய் சொல்லாத நாளே கிடையாது. நின்று வாக்கு கேட்டால் மக்கள் கேள்வி கேட்பாளர்கள் என்று திமுகவினர் ஓடிக்கொண்டே வாக்கு கேட்கின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக தாக்கி பேசினார். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து ஸ்டாலின் கண்டுகொள்வதே இல்லை. சட்டம், ஒழுங்கை கவலைப்படாத பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் இனி கனவில் தான் வீடு கட்ட முடியும்.
இதையும் படிங்க;- நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இபிஎஸ்ஐ வச்சு செய்த பிரபல இயக்குனர்..!
வாக்குறுதிகளை மறந்த ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்கினர். ஆனால், அவர் எப்படி ஆட்சி நடத்துவார் என மக்கள் தற்போது உணர்ந்துகொண்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கனிமொழி, ராசா ஆகியோர் சிறை சென்றனர். அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஏற்கனவே இருந்த சிறைக்கு மீண்டும் செல்வார்கள் என்றார்.