நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இபிஎஸ்ஐ வச்சு செய்த பிரபல இயக்குனர்..!

ஸ்டாலின் அவர்களே உண்மையிலேயே வேட்டி கட்டி, மீசை வைத்த, தலைவராக இருந்தால், ஆண்மகனாக இருந்தால், வெக்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீட்டிலேயே விட்டு விடுங்கள். 

Director Naveen criticized Edappadi Palanisamy

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆதரித்து இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரச்சாரத்தின் போது இபிஎஸ்;- திமுகவினர் வாக்காளர் பெருமக்களை ஆடுகளைப் போல கொட்டகையில் அடைத்துள்ளது ஜனநாயகப் படுகொலை செய்கின்றனர். ஜனநாயக முறைப்படி  தேர்தல் நடக்க வேண்டும்.  தேர்தல் விதிமுறைகளை திமுக அமைச்சர்கள் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க;- வேட்டி கட்டிய, மீசை வைத்த தலைவராக இருந்தால் தேர்தலை நேர்மையாக சந்தியுங்கள்- ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்

Director Naveen criticized Edappadi Palanisamy

நான் வேட்பாளரை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என அறிவித்த நிலையில், ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களுக்கு தலா 2000 ரூபாய் கொடுத்து அடைத்து வைத்துள்ளார்கள் என குற்றம்சாட்டினார். மேலும்,  ஸ்டாலின் அவர்களே உண்மையிலேயே வேட்டி கட்டி, மீசை வைத்த, தலைவராக இருந்தால், ஆண்மகனாக இருந்தால், வெக்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீட்டிலேயே விட்டு விடுங்கள். 

இதையும் படிங்க;- ஜனநாயக படுகொலை.. சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்கிறார்கள்.. ஆளுங்கட்சி மீது புகாரை அடுக்கும் சி.வி.சண்முகம்

Director Naveen criticized Edappadi Palanisamy

அதிமுகவின் வேட்பாளரை எதிர்க்க சக்தி இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைப்பதை விட்டுவிட்டு, நேர்மையான முறையில் சந்தியுங்கள்.  திமுகவினருக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் வாக்காளர்களை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள்.  தமிழகத்தில் எத்தனையோ தேர்தல் நடைபெற்று இருந்தாலும் இப்படி வாக்காளர்களை அழைத்துச் சென்று அடைத்து வைத்ததாக வரலாறே இல்லை என இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. 

 

இந்நிலையில், இயக்குனர் நவீன் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு என  எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல் என்று நவீன் கடுமையாக சாடியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios