அதேபோல் கோவிலில் உள்ள கழிவுகளை அகற்றவும் புனரமைக்கவும் உள்ளதாக அவர் கூறினார். உதாரணமாக பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் உள்ள குளத்தில் உள்ள நீர் எப்போதும் வற்றியது கிடையாது என்ற அவர், அந்த நீர் ஏன் வற்றாமல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதே நிலையை மற்ற கோவில்களில் உள்ள குலத்திற்கும், அந்த நிலையைக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதே இல்லை என்றும் அந்த நீரில் இதுவரை ஏன் வற்றவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின்னர் அதே நிலையை மற்ற கோவில் குலங்களுக்கும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட திருக்கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது 50 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் உள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளும் பணிகள் எவ்வளவு உள்ளன என்பது குறித்த பட்டியலை தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பல திருத்தலங்களில் நாற்பதாண்டுகளுக்கு மேல் தேர்தல் தேரோட்டம் செல்லாமல் இருக்கிறது என்றும் தேர்கள் கோவில்களிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், தேரோட்டம் செல்லும் வழி தடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டதால் அதற்கான புதிய வழித்தடத்தை அமைப்பதற்கும், இன்னும் இதுபோல எவ்வளவு திருத்தங்கள் கோவில்களில் நிறுத்தப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் தயார் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல் கோவிலில் உள்ள கழிவுகளை அகற்றவும் புனரமைக்கவும் உள்ளதாக அவர் கூறினார். உதாரணமாக பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் உள்ள குளத்தில் உள்ள நீர் எப்போதும் வற்றியது கிடையாது என்ற அவர், அந்த நீர் ஏன் வற்றாமல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதே நிலையை மற்ற கோவில்களில் உள்ள குலத்திற்கும், அந்த நிலையைக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள பல கோவில்களில் பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது என்றும், கோவில்களில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது மற்றும் பல ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை இருப்பவர்களுக்கு வாடகை முறைப்படுத்தி நிலுவையிலுள்ள வாடகை வசூல் செய்வது திருக்கோயிலில் தடையின்றி பூஜைகள் நடத்தப் மற்றும் திருக்கோயில் களில் உள்ளே பல ஆண்டுகளாக நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளது அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றும் பணி தொடங்க உள்ளதாகவும் அதற்கு இணை ஆணையர் அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.