கந்த சஷ்டி விவகாரம்: பிராயசித்தம் தேட வேண்டியவர்கள் பாஜகவினரே.! திமுகவுடன் கூட்டணி வைத்தாரா ?முருக பெருமான்.!
கந்த சஷ்டி விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து வருவது குறித்து பாஜக தமிழ் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்...' முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, சுவாமி மலை ஆகிய ஐந்து படை வீடுகளில் திமுக எம்எல்ஏக்களே இருக்கிறார்கள். கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய போது சிறிய கண்டனம் கூட இவர்கள் தெரிவிக்கவில்லை என கிண்டிவிட்டார் பாஜக தமிழ் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்.
கந்த சஷ்டி விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து வருவது குறித்து பாஜக தமிழ் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்...' முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, சுவாமி மலை ஆகிய ஐந்து படை வீடுகளில் திமுக எம்எல்ஏக்களே இருக்கிறார்கள். கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய போது சிறிய கண்டனம் கூட இவர்கள் தெரிவிக்கவில்லை என கிண்டிவிட்டார் பாஜக தமிழ் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்.
இதற்கு பதிலளித்துள்ள திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர்.சரவணன்..'
தமிழகத்தில் பா.ஜ.க தேரை உருள வைக்க முடியாத நீங்களா? திருப்பரங்குன்றம் தங்கத் தேரை உருள வைத்தீர்கள்? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லும் சாரே!
தமிழக மக்களில் முக்கால்வாசி பேர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனாலும் இந்த மண் திராவிட மண். அதற்கு தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலே இதற்கு சாட்சி. தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
பாவ பிராயசித்தமாக மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் திமுக எம்எல்ஏக்கள் அல்ல; முருகனின் அருளாசி திமுக எம்எல்ஏக்களுக்கு இருந்ததால் தான் வெற்றி கிடைத்தது. அரக்கனை சூரசம்ஹாரம் செய்த முருகனுக்கு கூட தெரிந்திருக்கிறது. திமுக வெற்றி பெறவேண்டும் என்று. அதனால் தான் பாஜகவை நோட்டாவுக்கு அனுப்பியிருக்கிறார் முருகன்.ஆக பாவபிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டியவர்கள் பாஜகவினர் என்பதை மறந்து விடாதீர்கள். முருகன் கடவுளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து அரக்கர்களை சூரசம்ஹாரம் செய்ய தொடங்கிவிட்டார். காலம் எங்கள் கனிந்து கொண்டிருக்கிறது பேராசிரியரே.!
பாஜக தனித்து போட்டியிட்டால் நோட்டாவை விட பின்னுக்குதான் போவீர்கள். அந்த அளவிற்கு மக்கள் பாஜக மீது கோபத்தில் இருக்கிறார்கள்.காரணம் கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஒரு கண்ணில் வெண்ணெய்; இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்து நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமானது.இதே போன்று ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதே மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்கு பதில் சொல்லுவார்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நீங்கள் பழனிக்கு காவடி எடுத்தாலும், திருச்செந்தூருக்கு பாத யாத்திரை போனாலும் கூட அது நடக்காது.வடமாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாஜக தலைமை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க உள்ளடி வேலைகளை செய்து வருவது ஊரறிந்த உண்மை.ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் ஆட்சி ஆட்டம் காண வைத்தது யார்? அந்த கூத்துக்கு யார் காரணம்? சச்சின் பைலட்டுக்கு முதல்வர் ஆசை காட்டி அவரை நிற்கதியாக்கியது யார்? பொய் சொல்லாத பேராசிரியர் உண்மையை சொல்லுவாரா?
தமிழகத்தில் திமுக நினைத்திருந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஆட்சியை பிடித்திற்க முடியும். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர திமுக என்றைக்குமே நினைத்தது இல்லை.மாற்றுக்கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிச்சென்றவர்கள் எல்லாம் திமுகவிற்கு தூது விட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் சாயம் ;முகமூடி வெளுத்து கிழியத்தொடங்கி விட்டது. கொரோனாவில் பாஜக நடத்தும் அரசியல் கூத்துகள் நாள்தோறும் நடனமாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஜால்ராவாக அதிமுகவும் ஒத்தூதிக்கொண்டிருக்கிறது.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் நோட்டா ஸ்ரீனிவாசன். பாவம்.பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டு டாக்டர்.கலைஞரால் வளர்க்கப்பட்ட இயக்கம் தி.மு.க. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை வார்த்தெடுத்த இயக்கம் தி.மு.க. அது தந்த சமூக நீதிக் குரல் தான் வெறும் ஸ்ரீனிவாசனை பேராசிரியர் ஸ்ரீனிவாசனாக ஆக்கி இருக்கிறது.
2016 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க கோமா நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைரேகையை போலியாக பதிவு செய்து களம் கண்டது. பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக தலைவர் கலைஞர், தலைவர் தளபதியாரால் கைகாட்டப்பட்ட நான் 70362 வாக்குகள் பெற்றேன். பா.ஜ.க சார்பாக நிறுத்தப்பட்ட சாட்சாத் பேராசிரியர் அவர்கள் 6930 வாக்குகள் பெற்று அவரது மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தினார்.
2019-ல் முருகப்பெருமானின் திருவிளையாடலால் மீண்டும் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதே சரவணன் தி.மு.க வேட்பாளராக தி.மு.க தலைவர் தளபதியார் மற்றும் இளைஞரணி செயலாளர் .உதயநிதி சூறாவளி பிரச்சாரத்தால் ஆளுங்கட்சி முறைகேடுகளைத் தாண்டி வெற்றி பெற்றேன்.
2011 தேர்தலில் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் சீனிவாசன் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? அது தான் அவரின் பெருமை. பாஜகவிற்கு மக்கள் கொடுத்த மதிப்பு. பாஜக திராவிடக்கட்சிகளோடு போட்டி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நோட்டாவுடன் நீங்கள் போட்டி போடுங்கள் நாங்கள் யாரும் கண்டு கொள்ளுவதில்லை.
கந்தன் கருணை திமுகவிற்கு உண்டு. அதனால் தான் முருக பெருமானின் அறுபடை வீடுகளையும் நாங்களே கைப்பற்றியிருக்கிறோம்.முருகனின் கந்த சஷ்டியை வைத்து பாஜக செய்யும் அரசியல் நாடகம் மக்கள் மன்றத்தில் அம்பலமாகி இருக்கிறது.இடஒதுக்கீடு பிரச்சனையை திசை திருப்பவே நீங்கள் ஆடிய கந்த சஷ்டி திருவிளையாடல் தற்போது அம்பலமாகி இருக்கிறது. 2021 திமுகவிற்கே கந்தனின் அருள் எங்களுக்கே.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் வைத்து நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதி கந்தனின் தங்கத்தேரை மீட்டு உலா வரச் செய்வேன் என்பதே. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி முதல் வேலையாக தங்கத் தேரினை நானும், தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் மணிமாறன் ஏனைய நிர்வாகிகளும் உலா வரச் செய்து மக்கள் வேண்டுதலை நிறைவேற்றினோம்.
கடவுளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கொரோனா தொற்று நடவடிக்கையில் கைதட்டல், குத்துவிளக்கேற்றுதல் தாண்டி அவர் மற்றும் அவரது இயக்கத்தின் பங்கு என்ன என்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலின் முன்பு மேடை அமைத்து சமூக இடைவெளி காத்து விவாதம் நடத்தத் தயாரா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.