சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த கனக துர்காவை அவரது வீட்டில் சேர்க்க மறுத்ததைத் தொடர்ந்து தற்போது பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள தன்னை தாக்கியதாக மாமியார் மீது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளார்.

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து பெண்கள் பலர் கோயிலுக்குள் செல்ல தொடர்ச்சியாக முயற்சி செய்தனர். பல்வேறு தடைகளைத் தாண்டி, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனக துர்கா மற்றும்  கண்ணூரைச் சேர்ந்த பிந்து என்ற இரண்டு பெண்கள்  கடந்த 2ம் தேதி சபரிமலை கோயிலுக்குள் சென்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அச்சுறுத்தல் காரணமாக மறைமுக பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். பின்னர் கனக துர்கா அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கனகதுர்காவை, அவரது மாமியார் சுமதி கடுமையாகத் தாக்கினார்.

அதனையடுத்து, கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கனகதுர்காவை வீட்டில் சேர்க்க அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி மறுத்துவிட்டார். கனகதுர்காவின் சகோதர் பரத் பூஷனும், வீட்டில் சேர்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதனையடுத்து, கனகதுர்கா காவல்நிலையம் சென்று முறையிட்டார்.

பெரிந்தலம்மன்னா பகுதியிலுள்ள அரசு பாதுகாப்பு மையத்தில் கனகதுர்கா தங்கவைக்கப்பட்டுள்ளார். ஐயப்பன் சுவாமி மற்றும் இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டால்தான் வீட்டில் சேர்த்துகொள்ளோம் என்று கனகதுர்காவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, சபரிமலை கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் சேர்த்துக் கொள்ள மறுத்து துன்புறுத்துவதாக கனக துர்க உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.